ஒரு செய்தி

செப்ரெம்பர் 22, 2006

படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லீம்கள் மீது துப்பாக்கிச் சூடு

Filed under: Sri Lanka,Tamil Eelam — CAPitalZ @ 12:14 பிப

அம்பாறையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று சிறிலங்கா முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அம்பாறை படுகொலை குறித்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நசீர் அகமெட் வெளியிட்டுள்ள அறிக்கை:

இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டாலும் முழுமையாக அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள சிறப்பு அதிரடிப்படையால் பாதுகாக்கப்பட்ட இடத்தில்தான் படுகொலை நடந்துள்ளமையை மறக்கக் கூடாது.

சிறப்பு அதிரடிப்படையேதான் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல என்று அப்பகுதி மக்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

படுகொலைச் சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றிலும் சிறப்பு அதிரடிப்படையினரது முகாம்கள் உள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நுழைந்து படுகொலை செய்துவிட்டு அதிரடிப்படையினரின் பார்வையில் படாமல் தப்பிச் சென்றது எப்படி என்பது புதிரை ஏற்படுத்துகிறது.

கடந்த சில மாதங்களாக முஸ்லிம் மக்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் முறுகல் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் செயல் வன்மையாக கண்டனத்துக்குரியது என்று அதில் நசீர் அகமெட் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: